மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை வரும் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் கும்பல்.. ஒருவன் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்.!
வறுமைக்காக வேலைக்கு வரும் பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து பாலியல் தொழிலில் தள்ளிவந்த கும்பலில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னையில் உள்ள திருவேற்காடு பகுதியில், வேலை தேடி வரும் பெண்களை வீட்டில் அடைத்துவைத்து பாலியல் தொழிலில் தள்ளுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று திருவேற்காடு பகுதியில் மேற்கூறிய செயலில் ஈடுபடும் கும்பல் தொடர்பான தகவல் கிடைக்கவே, மாற்று சீருடையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்தனர்.
நடுரோட்டில் மாற்று சீருடையில் அதிகாரிகள் நடத்திய பரபரப்பு சம்பவத்தால் மக்கள் ஒருகணம் பதறிப்போன நிலையில், அதிகாரிகள் தங்களின் அடையாளம் குறித்து தெரிவித்தபோது அனைவரும் நிம்மதியடைந்தனர். கைது செய்யப்பட்டவரின் வாக்குமூலத்தின் பேரில் ஒரு பெண் மற்றொரு இடத்தில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், வெளி மாநிலங்களில் இருந்து வறுமையால் வேலைக்கு வரும் பேன்களை குறிவைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளியது அம்பலமானது. இந்த கும்பல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.