மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்.. 19 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.!
சென்னையில் உள்ள திருவேற்காடு பகுதியில், 16 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.
இதனால் சிறுமியை கண்டறிந்து தரக்கூறி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில், சிறுமியை செல்லியம்மன் நகரில் வசித்து வரும் சுரேஷ் கண்ணன் (வயது 19) என்ற வாலிபர் காதலிப்பதாக ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது அம்பலமானது.
இதனையடுத்து, தனிப்படை காவல் துறையினர் திருப்பூரில் இருந்த சுரேஷ் கண்ணனை கைது செய்து, சிறுமியை மீட்டு திருவேற்காடு காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், சிறுமி காதல் வலையில் வீழ்த்தி அழைத்து செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. சுரேஷை கைது செய்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.