மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சி.சி.டி.வியில் சிக்கிய காவலர் அதிரடி கைது.!
வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 31 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் காவலரின் மீது பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரில், "வேலைக்கு சென்று ஜன. 30 ஆம் தேதி நான் இரவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தேன்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்தார். நான் கூச்சலிட்டதால் தப்பி சென்றார். அவரை கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி கேமிராவை கண்காணித்த அதிகாரிகள், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த திருவெற்றியூர் காவல் நிலைய அதிகாரி வனராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.