திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மின்வயர் அறுந்து கிடப்பது தெரியாமல், தண்ணீரில் கால்களை வைத்த ஓட்டுநர் பரிதாப பலி.!
சென்னையில் உள்ள திருவெற்றியூர் கலைஞர் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 61). இவர் கண்டெய்னர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
மணலி புதுநகர் வெள்ளாங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கண்டைனர் யார்டில் வேலை பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார்.
யார்டில் இருந்த தண்ணீரில் மிதித்து கடந்து செல்ல முயற்சித்தபோது, மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், தேவராஜனுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் தண்ணீரில் மின்சார வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தேவராஜ் கால்களை வைத்தபோது மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்பு நடந்தது உறுதியானது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.