திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடிபோதையில் வம்பு வளர்த்ததால் பயங்கரம்: ரௌடி முகத்தில் சரமாரி வெட்டு.. பரிதாபமாக பறிபோன உயிர்.!
சென்னையில் உள்ள திருவெற்றியூர், மணலி எட்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் ஜோதீஸ்வரன் (வயது 30). இவரின் மீது இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் அங்குள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜோதிஸ்வரன் திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில், மீனவர்கள் பயன்படுத்தும் குடிசையில் தூங்கி இருக்கிறார். நள்ளிரவு 2 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஜோதிசுவரனை இழுத்துச் சென்று முகத்தில் சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கின்றனர்.
இவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த ஜோதிஸ்வரன், அங்கிருந்து ஓடிய நிலையில் விரட்டிச் சென்ற கும்பல் அவரை தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன்பின் அங்கிருந்து ஆடு ஒன்றும் கும்பலால் வெட்டப்பட்ட நிலையில், காயமடைந்த ஆடு சத்தமிடமே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்திருக்கின்றனர். அப்போது கயவர்களை பிடிக்க முயன்ற மணிமாறன் என்பவரின் கைகளிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் ஜோதிஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளதை கண்ட அதிர்ச்சி அடைந்த மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மணிமாறனை ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜோதிஸ்வரனின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சார்ந்த அபினேஷ் (வயது 20), சுனில் (வயது 22) ஆகியோர் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்தது உறுதியானது.
நேற்று முன்தினத்தில் திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரை ஜோதிஸ்வரன் சந்திக்க வந்துள்ளார். அவர்கள் கடற்கரையில் இருந்து மது குடித்த நிலையில், அச்சமயம் அவ்வழியே வந்த அபினேஷ் மற்றும் சுனில் ஆகியோருடன் தகராறு வளர்த்துள்ளனர்.
இதில், அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில், ஜோதிஸ்வரன் போதையில் அங்கேயே இரவு நேரத்தில் உறங்கியுள்ளார். அவரின் நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆத்திரத்தில் நள்ளிரவு 1 மணியளவில் கடற்கரைக்கு சென்ற அபினேஷ், சுனில் மீனவர்கள் பயன்படுத்தும் குடிசையில் ஜோதிஸ்வரன் தூங்குவதை கண்டு கொலை செய்துள்ளனர். இருவரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.