திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போதை இளசுகள் அட்டூழியம்.. சரக்கடித்து தலைமை காவலரின் மண்டையை உடைத்த பயங்கரம்.!
மது போதையில் தலைமை காவலரை தாக்கிய 4 இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள திருவொற்றியூர், பலகை தொட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தலைமை காவலர் ஆவார். செந்தில் குமார் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவரின் வீட்டு அருகே மதுபானம் அருந்திய நான்கு இளைஞர்கள். காலி மதுபான பாட்டிலை செந்தில்குமாரின் காரின் மீது வீசி உள்ளனர். இதனை கண்ட செந்தில்குமார் தட்டிக் கேட்கவே, அவர்கள் காங்கிரீட் கல்லை எடுத்து தலைமை காவலரை தாக்கியுள்ளனர்.
இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்படவே, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகார் பேரில் அதிகாரிகள் 4 இளைஞர்களை தேடி வருகின்றனர்.