#HappyNews: சென்னை மக்களே ஜமாய்ங்க.. இலவச பேருந்து பயணம்... அதிகாரபூர்வ அறிவிப்பு.!



Chennai to Mamallapuram Free Bus for Chess Game

செஸ் போட்டியை தொடர்ந்து இலவச பேருந்துகள் மாமல்லபுரத்திற்கு செல்லும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியானது ஜூலை 28 ல் தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் தான் முதல் முதலாக செஸ் போட்டி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மும்மரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்திற்கு சென்னையில் இருந்து இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 01 ஆம் தேதி வரையில் 5 பேருந்துகள் வீதம், மணிக்கு 1 பேருந்தாக சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு பேருந்து இயக்கப்படுகிறது. 

இந்த பேருந்துகள் சென்னை மத்திய கைலாஷில் இருந்து மாமல்லபுரம் நோக்கி இயக்கப்படும். ராஜீவ் காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர், ஈ.சி.ஆர் சாலை வழியில் எஸ்.ஆர்.பி டூல்ஸ், முட்டுக்காடு உட்பட 19 நிறுத்தங்களில் இப்பேருந்து நின்று செல்லும். சென்னையில் இருந்து மாமல்லபுரம் சென்று வர இயலாமல் தவித்தவர்களுக்கு இது ஒரு இலவச வாய்ப்பாகவும் அமைகிறது.