மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிப்ட் கேட்பதுபோல் நடித்து நகைகள் கொள்ளை; ஓடும் காரில் இருந்து குதித்து தப்பியோடிய திருநங்கை.!
சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் சார்ந்தவர் விஷால் (வயது 18). பெங்களூரில் தங்கி இருந்து விமானம் ஓட்டுவதற்காக பயிற்சியை எடுத்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்த நிலையில், நேற்று இரவு தனது காரில் வீடு நோக்கி பயணம் செய்தார். அப்போது கே.கே நகர் 80 அடி சாலையில் வந்த சமயத்தில் ,திருநங்கை ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.
இதனால் காரை நிறுத்திய விஷால் உதவி செய்ய முயற்சித்த நிலையில், காருக்குள் ஏறிய திருநங்கை கார் சிறிது தூரம் சென்றதும் விஷால் அணிந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து, காரில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக விஷால் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.