பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சரக்கு வாங்கிக்கொடுக்காத கணவரின் கழுத்தை நெரித்துக்கொலை.. நள்ளிரவில் பகீர் சம்பவம்.!
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, எஸ்.எம் நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவரின் மனைவி நாகம்மாள். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவர் இருந்த நிலையில், நாகம்மாள் மதுப்பழக்கம் காரணமாக கணவர் மனைவியை கைவிட்டு சென்றுள்ளார்.
இதற்குப்பின் நாகம்மாளுக்கு மணிவண்ணனுடன் பழக்கம் பேராடவே, இருவரும் மதுபான விஷயத்தில் ஒன்றிணைந்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக தம்பதிகள் இருவரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், 5 வயதுடைய குழந்தையும் இருக்கிறது.
மதுவுக்கு அடிமையான தம்பதி
இருவரும் குடிப்பழக்கம் கொண்டவர்கள் என்பதால், அவ்வப்போது போதையில் சுற்றியும் வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மதுபானம் வாங்கி தராதது தொடர்பாக நாகம்மாள் - மணிவண்ணன் இடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்.. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கணவர் கொலை
பின் கணவர் மூச்சு-பேச்சு இன்றி இருப்பதாக கணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். மருத்துவமனையில் மணிவண்ணனின் மரணம் உறுதி செய்யப்பட, காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். அப்போது, கணவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொலை செய்தேன் என கூறி இருக்கிறார்.
இதனால் நாகம்மாளை கைது செய்த காவல்துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுபானம் வாங்கி கொடுக்காத காரணத்தால் மணிவண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறவினர்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரு தலை காதல் விவகாரம்.. தந்தையை கொன்று பெண்ணை கடத்தி சென்ற இளைஞர்!