மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோசடி செய்தவனை காரில் கடத்தி சென்ற கும்பல்.. அதிரடி காண்பித்த அதிகாரிகள்., தலைதெறித்து தப்பியோடிய கடத்தல்காரர்கள்.!
சென்னையில் உள்ள தி. நகரில் வசித்து வருபவர் ரவி (வயது 50). இவர் நிலத்தரகராக இருந்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் விருகம்பாக்கம் ஏ.வி.எம் காலனி பகுதியில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, காரில் வந்த 6 பேர் கும்பல் ரவியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வடபழனி காவல் உதவி ஆணையர் பாலமுருகன், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, புழல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடத்தல் கும்பலை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
கடத்தல் கும்பல்வசம் இருந்த ரவி மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை கைது செய்தனர். 2 பேர் தப்பி சென்றனர். விசாரணையில், பணத்தகராறில் அயனாவரம் பகுதியை சேர்ந்த நசுரூதீன், சுனில் குமார், கோபிநாத், ஆரோக்கியராஜ், அஜய்குமார், திலீப் உட்பட 8 பேர் கும்பல் கடத்தலில் ஈடுபட்டது அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் 6 பேரை கைது செய்த காவல் துறையினர், தப்பி சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
கடந்த சில மதத்திற்கு முன்னதாக அயனாவரம் பகுதியில் பிரச்சனையில் உள்ள வீட்டை ரவி ரூ.8 இலட்சம் பெற்று நசுரூதீனுக்கு வாடகைக்கு விட்டு மோசடி செய்ததால் கடத்தல் சம்பவம் நடந்தது அம்பலமானது.