மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோரம் நின்ற லாரியால் சோகம்.. மகன், மகள், தந்தை என 3 பேர் துடிதுடித்து மரணம்.!
மகன், மகளுடன் கோவளம் சென்று வீட்டிற்கு வந்த தந்தை உட்பட 3 பேரும், லாரியின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம் குரோம்பேட்டை, நாகல்கேனி பூபதி தெரு - காந்தி நகரில் வசித்து வருபவர் கோபிநாத் (வயது 37). இவரின் மகன் கிரி (வயது 9), மகள் மோனிகா (வயது 7). தனது மகன் மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் கோவளம் சென்றிருந்த கோபிநாத், நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, இவர்கள் கோவளம் - மண்ணிவாக்கம் வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் வண்டலூர், மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் வருகையில் சாலையொன்றாம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கோபிநாத், கிரி, மோனிகா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், சாலையோரம் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.