மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய கள்ளக்காதலனுக்காக பழைய கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய பெண்மணி.. நடந்த பயங்கரம்.!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்மணி கள்ளக்காதல் வயப்பட்ட நிலையில், புதிய கள்ளக்காதலனுக்காக லிவிங் டூகெதரில் உடன் இருந்தவனை போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் சாரதாம்பாள் நகரில் வசித்து வருபவர் சௌந்தர்யா (வயது 39). இவர் மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 132 வார்டில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது கணவரை பிரிந்து இரண்டு மகனுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் சௌந்தர்யாவின் அக்கா மகன் தங்கி இருக்கும் நிலையில், சௌந்தர்யாவுக்கும் - பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய் (வயது 27) என்பவர் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே காதலாக மாறவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினத்தின் போது விஜய் சௌந்தர்யாவின் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், வீட்டில் மூன்று சிறுவர்கள் இருந்தது உறுதியானது. அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகமடைந்த காவல்துறையினர் சௌந்தர்யாவிடம் விசாரணை செய்தனர்.
அப்போது பிரபு என்ற கள்ளக்காதலுடன் சேர்ந்து விஜயை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அதாவது, விஜயுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த சௌந்தர்யாவுக்கு பிரபு என்பவரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயை அவர் கழட்டிவிட நினைத்த காரணத்தால், பிரபுவுடன் சேர்ந்து கொலை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.