2 பெண்களை அடைத்துவைத்து 2 ஆண்கள் 3 பெண்களுடன் சேர்ந்து செய்த கொடுமை..! பரபரப்பு சம்பவம்.. தலைநகரில் பேரதிர்ச்சி.!
2 பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள சாலிகிராமம் சாந்தி காலனியில் இருக்கும் வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் பலரும் வந்து சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் சென்று சோதனை செய்து பெண்ணை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் விபச்சார தொழில் நடத்திய கார்த்திகேயன், நெல்சன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இதனைப்போல திருவேங்கடசாமி தெருவில் மற்றொரு பெண்ணை அடைத்து வைத்திருப்பதும் அம்பலமானது.
இந்த தகவலை பெற்ற அதிகாரிகள் மற்றொரு பெண்ணையும் மீட்டனர். இவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சாந்தி, தேவி, சீதா ஆகிய 3 பெண்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.