கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன?..!



Chennai Vyasarpadi College Girl Hemavathi Suicide Hanged Rope

சென்னையில் உள்ள வியாசர்பாடி ஜான் கென்னடி நகரில் வசித்து வருபவர் பிரதாப் குமார். இவரின் மகள் ஹேமாவதி (வயது 22). இவர் செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 3 ஆம் வருடம் பயின்று வருகிறார். 

நேற்று காலை நேரத்தில் ஹேமாவதியின் தாய் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், ஹேமாவதி மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது, தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

chennai

பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்மணி எதற்ச்சையாக வீட்டிற்குள் சென்றபோது, ஹேமாவதி உயிருக்கு போராடுவதை கண்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ஹேமாவதியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஹேமாவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வியாசர்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.