மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செங்கல்லால் ஒரே அடி; மயங்கி விழுந்த மனைவி மாண்டதாக சரணடைந்த கணவர்.. இறுதியில் ட்விஸ்ட்.!
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 58). லாரி ஓட்டுநராக வேளை பார்க்கிறார். இவரின் மனைவி பரிமளா (வயது 55). பாண்டியன் மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் தினமும் மதுபானம் அருந்திவிட்டு, வீட்டில் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 19ம் தேதி தம்பதிகளிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் பாண்டியன் செங்கலை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார். இதனால் பரிமளா மயங்கி விழவே, பதறிப்போன பாண்டியன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பரிமளாவின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, அவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிமளா ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மனைவி உயிரிழந்துவிட்டதாக எண்ணி பாண்டியன் தலைமறைவாகவே, செல்போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை. இந்நிலையில், இன்று காலை கோயம்பேடு காவல் நிலையம் சென்றவர், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.
அதிர்ந்துபோன காவலர்கள் எம்.பி.கே நகர் காவல் துறையினருக்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் விசாரித்தபோது பாண்டியனின் மனைவி தலையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுப்போட்டு வீட்டிற்கு வந்தது தெரியவந்தது.
போதையில் இருந்த பாண்டியனோ முதலில் வழக்குக்கு பயந்து தலைமறைவாகிய நிலையில், இறுதியில் கொலை செய்துவிட்டதாக எண்ணி மனமுடைந்து காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். ஆனால், அவரின் மனைவியோ உண்மையில் மயங்கி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருக்கிறார் என்பது அம்பலமானது.
இதனையடுத்து, பாண்டியனை எம்.பி.கே நகர் காவல் நிலையம் அழைத்து வந்த அதிகாரிகள், மனைவியை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.