திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடும்ப பிரச்சனையால் விபரீதம்; மின்கம்பிகளின் மீது பாய்ந்து தற்கொலை செய்த 23 வயது இளைஞர்.. மதுபோதையில் அதிர்ச்சி செயல்.!
சென்னையில் உள்ள மேற்கு தாம்பரம், மாந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் டேனியல் (வயது 23). குடும்ப பிரச்சனை காரணமாக, பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் இருக்கும் நண்பர் மணிகண்டனின் வீட்டில் தற்போது தங்கி இருக்கிறார்.
நேற்று இரவு 11 மணியளவில் மணிகண்டன் மற்றும் டேனியல் தங்களின் நண்பர்களுடன் வீட்டின் முதல் மாடியில் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். மணிகண்டன் தனது நண்பன் டேனியலுக்கு பல அறிவுரை கூறி, வீட்டிற்கு செல் என பேசி சமாதானம் செய்துள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு 11:30 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் இருந்து மின்கம்பிகள் மீது குதித்த டேனியல், மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி துடிதுடித்தார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன தெருமக்கள் கூக்குரலிட, உறங்கிக்கொண்டிருந்த பலரும் பதறியபடி வெளியே வந்தனர்.
பின் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினர், பீர்கான்காரனை காவல் துறையினர், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டாலும், தீயணைப்பு படையினர் உதவியுடன் டேனியல் மீட்கப்பட்டு, அவசர ஊர்தியினர் மூலமாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
ஆனால், முதலுதவி சிகிச்சை பலனின்றி டேனியல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீர்க்கான்காரனை காவல் துறையினர், டேனியலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.