#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாயில் துணி வைத்து இளம்பெண் கத்தி முனையில் வன்கொடுமை.. சென்னையில் பயங்கரம்..!
போதை ஆசாமி ஒருவர் பெண்ணை பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3வது பிரதான சாலையில் வசித்து வருபவர் சுமதி (வயது 50). இவர் மாதவரம் பகுதியில் உள்ள பால் பண்ணையில் தனியார் கம்பெனி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி சுமதி இரவு வேலையை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை வீடு திரும்பும்போது இவரை 40 வயதுடைய ஒரு போதை ஆசாமி வழி மறித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன சுமதி, 'எதற்காக என்னை வழிமறித்தாய்? நீ யார்?' எனக் கேட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இருப்பினும் அவர் மீண்டும் மீண்டும் சுமதியை வழிமறித்துள்ளார். அத்துடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, 'உன்னை குத்தி விடுவேன், அமைதியாக இரு' எனக்கூறி சுமதியை மிரட்டி இருக்கிறார். இதனால் சுமதி என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்ற நிலையில், சுமதியின் வாயில் துணியை வைத்து திணித்து அங்குள்ள விளையாட்டு பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும், அந்த நபர் பலவந்தமாக சுமதியை பலாத்காரம் செய்துள்ளான். அத்துடன் இது யாருக்கும் தெரிந்துவிடுமோ? என எண்ணி ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், சுமதி கதறி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த சுமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சுமதியை பலாத்காரம் செய்த மர்ம ஆசாமி யார் என்று கண்டுபிடித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, வீடியோ பதிவை வைத்து அவரை தேடி வருகின்றனர்.