மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபாச படத்தை வாட்ஸ் அப் மூலம் பரப்புவதாக 16 வயது சிறுமிக்கு மிரட்டல்... சென்னையைச் சார்ந்த இளைஞர் கைது.!
சென்னையைச் சார்ந்த இளைஞர் ஒருவர் 16 வயது சிறுமியின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் நிர்வாணமாக வெளியிடுவதாக மிரட்டல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் அவரை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டி இனம் பகுதியைச் சார்ந்த 16 வயது பள்ளி சிறுமி ஒருவர் சென்னை திருமுல்லைவாயல் பவானி தெருவை சார்ந்த கோபி என்ற 20 வயது இளைஞருடன் ஸ்னாப் சாட் மூலமாக பழகி வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் அறியாமையை பயன்படுத்தி இளைஞர் பணம் கேட்டும் மிரட்டத் தொடங்கியுள்ளார்.
ஐயாயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையென்றால் உன் நிர்வாண படத்தை வாட்ஸ் அப் மூலம் அனைவருக்கும் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டலும் கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி இருக்கிறார்.
அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை அந்த இளைஞரின் செல்ஃபோன் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தனிப்படை அமைத்து அவரை கைது செய்து நாகப்பட்டினம் அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது.