திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது!
திருவள்ளூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கூலி தொழிலாளி கருப்பு என்பவருக்கு 17 வயது மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் இந்த சிறுமி திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இதில் சிறுமி ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து திருத்தணி போலீசார் அப்பகுதிக்கு சென்று சிறுமையுடன் இருந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். இதில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருத்தணி அருகே உள்ள விகேஎன் கண்டிகை பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர், சிறுமிக்கு சித்தப்பா முறை என்பது தெரியவந்தது.
இதில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பள்ளிப்பட்டு வட்டம் கரிப்பேடு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதனிடையே அந்த இளைஞர் சிறுமியை பலவந்தமாக உடலுறவு வைத்துள்ளார்.
அதன் காரணமாக சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனையடுத்து சிறுமியை கடத்தி மிரட்டி கர்ப்பமாகியதாக பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.