தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக உரையாற்றினார். அதில், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயமாகிறது. நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஏற்கனவே திருநெல்வேலியில் இருந்து தென்காசி தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகவும், விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும் பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
13 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட உள்ளது என சுதந்திர தின் உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.