மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பொங்கல்னா அது சொந்த ஊருல தான்" சேலத்திற்கு புறப்பட்டார் முதல்வர்; மக்கள் உற்சாக வரவேற்பு
பொங்கல் பண்டிகை என்றாலே உலகில் எந்த மூலையில் வேலை செய்தாலும் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும். தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை இந்த பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவது ஒரு சந்தோஷம்தான்.
பொங்கல் திருவிழாவானது முதல் நாள் போகிப் பண்டிகையில் துவங்கி அடுத்து நாள் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை பொருத்தவரை நகரத்தில் இருக்கும் மக்களை விட கிராமத்து மக்கள் மிகவும் உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடுவர். பொங்கலின்போது கிராமத்தில் இருந்தாலே அது ஒருவிதமான உணர்வு தான்.
இதனை நன்கு உணர்ந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தின் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காமலாபுரம் விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக பெண்கள் வழி நெடுக கும்பம் ஏந்தி முதலமைச்சரை வரவேற்றனர்.