மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரள இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்!!
இன்று ஓணம் பண்டிகை கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஓணம் பண்டிகையானது கொண்டாடுவது வழக்கம். கல்லூரி படிக்கும் மாணவிகள் கல்லூரிகளில் பூக்கோலமிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து, நமது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில், மலையாளத்தில் கேரள மக்களிற்காக ஓணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "நாம் பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாகப் பார்ப்போமாக. பூக்கள், விருந்துகள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்த #ஓணசம் வாழ்த்துக்கள்" என்று கூறிப்பிட்டிருந்தார்.
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ.
— M.K.Stalin (@mkstalin) August 29, 2023
പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!#HappyOnam #HappyOnam2023 #Onam pic.twitter.com/Rt6sJo95PU