கோவை: கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தையை வளர்க்க தயக்கம்; தாய் எடுத்த முடிவு.!



Coimbatore Baby Sell Rs 1 Lakh 


கோவை மாவட்டம் காரமடையில் வசிப்பவர் அனிதா (28). இவர் தனது குழந்தையை காணவில்லை என துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தபோது, கள்ளக்காதல் காரணமாக பிறந்த குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதியானது.

பெண்ணுக்கு மோகன்ராஜ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் கள்ளக்காதல் வையப்பட்டனர். இதனால் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்த பின்னர், அவருக்கு தந்தையை கேட்டால் எதிர்காலம் என்னவாகும் என அனிதா யோசித்துள்ளார். 

Coimbatore

ரூ.1 லட்சத்துக்கு விற்பனை

பின் கள்ளகாதலனின் திட்டப்படி குமரி தம்பதிக்கு 1 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்ய, பந்தை பிரித்து எடுப்பதில் இருவருக்கும் தகராறு உண்டாகி, காவல் நிலையத்தில் குழந்தை மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடந்தபோது உண்மை அம்பலமானது.  

இதையும் படிங்க: #Breaking: திமுகவினர் கொழுக்க சுரண்டப்படும் மாநிலத்தின் வளங்கள் - அண்ணாமலை கடும் தாக்கு.!

இதனால் குழந்தையை விற்பனை செய்ததாக தாய் அனிதா (28), கள்ளக்காதலன் மோகன்ராஜ் (29), உதவி செய்தவர்கள் ரஞ்சிதா (32), சுஜாதா (32), ஷோபா (45) உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: காவல்துறை உதவி ஆய்வாளர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை; கோவையில் சோகம்.!