திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் மீது ஆசிட் வீச்சு... கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு சம்பவம்.!
வழக்கு விசாரணைக்கு நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முதல் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு இருந்த மர்ம நபர், பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள் பெண்ணை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்ம நபரை அடித்து நொறுக்கிய வழக்கறிஞர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆசிட் தாக்குதல் நடத்திய நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையில் பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்டு இருக்காம் என தெரியவருகிறது.