கோவை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!



Coimbatore ED Raid Today 20 March 2025

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு, மத்திய அரசால் தடை செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. தீவிரவாதத்துக்கு உதவுதல், முறைகேடான நிதிபரிமாற்றம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய அமைப்பை, மத்திய அரசு தடை செய்தது.

இதனிடையே, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத்துறை இதுதொடர்பாக பல்வேறு சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாடு மாநில அளவில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

Coimbatore

அமலாக்கத்துறை சோதனை

தொடர்ந்து இந்த விஷயத்தில் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.300 இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு, 16 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் தீர்ப்பளித்த நீதிமன்றம்; சிறைவாசம்.!

மேட்டுப்பாளையம் அவிநாசி நகரில் இரும்புக்கடை நடத்தி வரும் எஸ்டிபிஐ வடக்கு மாவட்ட செயலாளரின் வீடு, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பழக்கடை வைத்து நடத்தி வரும் வீணா ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த அதிகாரிகள், சிஆர்பிஎப் பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன் சோதனை நடத்துகின்றனர். 

இதையும் படிங்க: கோவை: கஞ்சா விற்பனையில் 22 வயது இளைஞர்கள்; தவறி விழுந்ததில் கை-கால் முறிவு.!