திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஊர் ஊரா சுத்த கூப்பிட்டபோதெல்லாம் போனேன்., திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலனை கம்பி என்ன வைத்த காதலி..!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறா. இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "நான் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெயபிரகாஷ் (வயது 24) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கமானது எங்களுக்குள் நட்பாக தொடங்கிய நிலையில், பின்னால் காதலாக மாறியது. இதனால் அடிக்கடி நேரில் சந்தித்து எங்களின் காதலை வளர்த்தோம். ஜெயப்பிரகாஷ் பல சுற்றுலா தலங்களுக்கு என்னை அழைத்துச் சென்று, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அத்துமீறினார். நாங்கள் தனிமையில் இருந்ததை எனக்கே தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
அவர் அழைத்த போதெல்லாம் அவருடன் பல இடங்களுக்கு சென்று நாங்கள் தனிமையில் இருந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் நான் அவரின் ஆசைக்கு இணங்கினேன். இந்நிலையில், திருமணம் தொடர்பாக கூறியபோது, ஜாதகம் பொருந்தவில்லை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
திருமணம் செய்ய வற்புறுத்தினால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன். அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி இரண்டு கட்டமாக ரூ.20 ஆயிரம் ரொக்கம், 3 சவரன் நகைகளை பறித்துக்கொண்டார். மிரட்டல் தொடருகிறது. அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கட்டிட மேஸ்திரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.