தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
கோவை: 21 மாணவ-மாணவிகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு; தனியார் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு, பி.எஸ்.ஜி மெட்ரிக் பள்ளியில் பயின்று வரும் 21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பள்ளிக்கு மார்ச் 08 முதல் மார்ச் 12 வரை விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பெற்றோர் குழந்தைகளின் மீது கவனம் செலுத்துங்ள் என்றும் பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை: மூட்டுவலி சிகிச்சைக்கு சென்ற இளைஞரிடம் சல்லாப உறவு முயற்சி..மசாஜ் செண்டரில் பலான தொழில்.. பெண்கள் மீட்பு.!
பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ள குழந்தைகள், அதன் அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறி
ஆங்கிலத்தில் மம்பஸ் (Mumps) என அழைக்கப்படும் வைரஸ் தொற்று, கோடைகாலத்தில் அல்லது பருவநிலை மாற்றத்தின்போது உடனடியாக ஏற்படும் உமிழ்நீர் சுரப்பி தொற்று ஆகும். இது உமிழ்நீர் சுரப்பியை வெட்கமடைய செய்யும். இதனால் தாடை, காது பகுதியில் வீக்கம், காய்ச்சல் உண்டாகும்.
இது தும்மல், இருமல் வாயிலாகவும் பரவும். காது, தாடை பகுதியில் வீக்கம், காய்ச்சல், தலைவலி, சோர்வு, பசியின்மை போன்றவையும் இதன் அறிகுறிகள் ஆகும். இவ்வாறான அறிகுறி இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது. சுயமான சிகிச்சை ஏதும் மேற்கொள்ள வேண்டாம்.
இதையும் படிங்க: கோவை: பெற்றோர் பேச்சை கேட்காததால் விபரீதம்.. 17 வயது நண்பர்கள் சாலை விபத்தில் பலி..!