திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தூங்கச் சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறப்பு.. காவல்துறை தீவிர விசாரணை.!
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கோவை மாவட்டம் ரத்னாபுரியைச் சேர்ந்த இளைஞர் மர்மமான ஒரு முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சுங்கான் கடை தோட்டியோட்டில் காளி தாஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். கோவை மாவட்டம் ரத்தினபுரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன்(40) ஆறுமுகம் நடத்தி வந்த ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
கார்த்திகேயனுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்றிரவு உறங்கச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் எழும்பவில்லை. இதனால் ஆறுமுகம் சென்று பார்த்த போது கார்த்திகேயன் இறந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இவரது புகாரை பெற்றுக் கொண்ட இரணியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திகேயனின் உடலை பார்வையிட்டனர். அவர் மர்மமான முறையில் இறந்ததால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.