திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படிக்கட்டில் பயணம்.. பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!
பேருந்து படிகட்டில் தொங்கி சென்ற கல்லூரி மாணவர், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், தேவமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார். இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல கல்லூரி முடிந்து ஜெயங்கொண்டம் செல்லும் அரசு பேருந்தில் அவர் ஏறிய நிலையில், பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியவாறு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பேருந்து, எப்பொழுதும் செல்லக்கூடிய வழக்கமான பாதையில் செல்லாமல் வாகன நெரிசல் காரணமாக எதிர்திசையில் சென்றுள்ளது. அப்போது அந்த சாலையின் நடுவே இருந்த டிவைடரில் உள்ள மின்கம்பத்தில், பழைய விளம்பரப்பலகையில் இவரது புத்தகப்பை சிக்கியுள்ளது.
இதனை சதீஷ் கவனிக்காமல் இருந்ததால் பேருந்து நகரும்போது அவரது புத்தகப்பை இழுத்து நிலை தடுமாறி வேகமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மாணவர் உயிரிழப்புக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தான் காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் படியில் தொங்கி செல்லக்கூடிய நிகழ்வுகள் தற்போது அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மாணவர்களின் உயிருக்கு பேரிழப்பு ஏற்படக்கூடும் என்பதை உணராது அவர்களும் சகஜமாக தொங்கி செல்கின்றனர். இதற்கு கூடிய சீக்கிரத்தில் அரசு ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.