திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கல்லூரி தாளாளர் கைது!
தென்காசி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள திப்பனம்பட்டியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் பாவூர்சத்திரத்தில் தங்கி, தென்காசி - நெல்லை சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் டிப்ளமோ நர்சிங் மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார்.
இந்த கல்லூரியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு படித்து வரும் மாணவி ஒருவருக்கு வினோத்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். மேலும் வினோத் குமாரின் மெடிக்கல் கல்லூரியில் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.