மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவியை காதலிக்க கூறி வற்புறுத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள ஒரே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் உளுந்தூர்பேட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவர், மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவியரின் கையைப் பிடித்துக் கொண்டு தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், மாணவியைத் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மிரட்டல் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.