ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தி! கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு!



college student get suicide

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான நித்திஷ் என்பவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை  இழந்ததாக கூறப்படுகிறது. நித்திஷ் தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்து வந்த அவர், அவ்வப்போது தனது உறவினர் நடத்தி வரும் 'டாட்டூ' கடைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அந்த கடை உள்புறம் பூட்டப்பட்டிருந்த நிலையில் நித்தீஷ் உள்ளே இருந்து வெகுநேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அப்போது, நித்தீஷ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

suicide

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கடையில் நித்தீஷ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 

அந்த கடிதத்தில், கடந்த சில நாட்களாக ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதாகவும், இதனால் தான் வேலை பார்த்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை எடுத்து  ஆன்லைன் விளையாட்டில் தோற்றுவிட்டதாகவும், இதனால் பயத்திலும், விரக்தியிலும் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதியுள்ளார்.