மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JUSTIN || ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை!!
மதுரை அருகே சுற்றுலா ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென நடந்த இந்த விபத்து குறித்து முதற்கட்டமாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை ரயில் தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் நாளை ஆலோசனை நடக்கவிருக்கிறது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக, ஆவணங்கள் அல்லது வீடியோ காட்சிகள் இருந்தால் நேரில் வந்து சம்ர்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விபத்து தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால் நேரில் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.