திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடித்துக் கொல்லப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
அரசு பேருந்தில் பணியில் இருக்கும்போது அடித்துக் கொல்லப்பட்ட நடத்துனர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று அதிகாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசு பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு வரும்போது மதுராந்தகத்தில் முருகன் என்ற பயணி குடிபோதையில் பஸ்சில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டுள்ளார்.
போதையில் இருந்த முருகன் நடத்துனரிடம் டிக்கெட் வாங்காமல் தகராறு செய்துள்ளார், மேலும் நடத்துனரை தாக்கியுள்ளார். இதனால் நடத்துனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரை உடனடியாக அருகே இருந்த மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துயரமான செய்தியை கேள்வியுற்றதும் மிகவும் வேதனை அடைந்தேன் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துனர் திரு,வி.பெருமாள் பிள்ளை அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிடவும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.