கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
குடிக்க காசு தர மறுத்த கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து... 3 இளைஞர்கள் கைது.!

சென்னை கொரட்டூர் அருகே மது குடிக்க பணம் தராததால் கட்டிடத் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் அடுத்த மேனாம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் வயது 30. இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு வந்த மூன்று பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று நபர்களும் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்து விழுந்த பாண்டியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பாண்டியன் மீது கொலை முயற்சி நடத்திய வடிவேல் (43), பரத் (21) மற்றும் ஆரோக்கியராஜ் (28) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.