கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மருத்துவர்களின் தொடர் அலட்சியம்... மூக்கு சதை அறுவை சிகிச்சை செய்ய சென்ற வாலிபர் உயிரிழப்பு... கதறும் குடும்பத்தினர்..!
கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மூக்கு சதை அறுவை சிகிச்சை செய்வதற்காக வேலூர் மாவட்டம் மஞ்சுகுப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அறுவை சிகிச்சைக்கு முன்பாக அளிக்கப்படும் மயக்க மருந்தை கோவிந்தராஜுக்கு மருத்துவர்கள் செலுத்தினர். அப்போது திடீரென கோவிந்தராஜ் சுயநினைவு இழந்ததாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கோவிந்தராஜ் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அவரது குடும்பத்தினர் கோவிந்தராஜை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது செல்லும் வழியிலேயே கோவிந்தராஜ் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனது மகனின் இறப்பிற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்று குடும்பத்தினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதனால் அந்த மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.