மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ பரிதாபம்... சோறு வடித்ததால் பறிப்போன உயிர்.!! பலியான 16 வயது சிறுமி.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் சோறு வடித்த கஞ்சி கொட்டியதில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் தொழிலாளி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிகாஸ் ரவி தாஸ். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகேயிருக்கும் புதுப்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார. இவரது மகள் நந்தினி தாஸ். 16 வயதான இவர் வீட்டு வேலைகளையும் கவனித்து வந்திருக்கிறார்.
சோறு வடிக்கும் போது விபத்து
இந்நிலையில் நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்த நந்தினி சோறு வடித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக வடிக்கஞ்சி அவரது உடலில் கொட்டி இருக்கிறது. கஞ்சி கொட்டியதால் உடல் வெந்த நிலையில் நந்தினி வலியால் அலறி துடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: "எங்க புள்ள மேல கை வைப்பியா.." பூட்டி வைத்து ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்.!! காவல்துறை குவிப்பு.!!
பரிதாபமாக உயிரிழப்பு
இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நந்தினி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: சுற்றி வளைத்த கும்பல்... தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.!! 2 இளைஞர்கள் கைது.!!