#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை ஐ.ஐ.டி.யில் 71 பேருக்கு கொரோனா தொற்று.! அனைத்து துறைகளையும் மூட உத்தரவு.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வந்தது. இதனையடுத்து தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.
The students, scholars and staff who are staying inside the campus are advised by @iitmadras to confine themselves to their hostel rooms and maintain social distance at all times.#COVID19 #coronavirus #iitmadras #Chennaihttps://t.co/Sj57J0eiOi
— DT Next (@dt_next) December 14, 2020
மேலும் சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.