#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்களே உஷார்.!! மீண்டும் பழையபடி ஆட்டம் காட்டும் கொரோனா பரவல்.! நேற்று ஒருநாள் மட்டும் அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கையை பார்த்தீர்களா.!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் நேற்று ஒரே நாளில் 3,043 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6484 பேர் புதிதாக நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 1665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.