35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி செய்த செயல்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 10 முதல் 24 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனாவால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கொரோனாவிலுருந்த தம்மை காப்பாற்றிக்கொள்ள மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டம் கொண்டுர் பகுதியைச் சேர்ந்த ஜம்புலிங்கம் என்ற 35 வயது நிரம்பிய நபர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.