திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாலையும், கழுத்துமாக காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!!
திருப்பூரை சேர்ந்த ஆண், பெண் இருவரும் வெகுநாட்களாக காதலித்து வந்துள்ளார். இருவரது காதலை வீட்டில் தெரிவித்து சம்மதம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்களது இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. அதாவது இவர்களது காதலனுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, அண்ணாமலையார் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், திருமணம் முடிந்த கையேடு இருவரும் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விசாரித்ததில், இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளதாகவும், இவர்களது காதல் விவகாரம் அறிந்து பெண் வீட்டார் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.