மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீதிமன்றம் ஒன்றும் விளையாட்டு மைதானமில்லை.. நடிகர் மன்சூர் அலிகானை கண்டித்த நீதிமன்றம்.! என்ன காரணம்??
அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகை திரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், அவர் மனிதக்குலத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார். அவரை வன்மையாக கண்டிக்கிறேன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. தொடர்ந்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறையினர் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் முன்ஜாமீன் மனுவில், ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையில் முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் கிடையாது, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். மேலும் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.