மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருமகள்களை பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூர தந்தை! ஆடிப்போன நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!
ஈரோடு பெருந்துறை பகுதியில் வசித்து வந்தவர் குருநாதன். 48 வயது நிறைந்த இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது இரண்டாவது மனைவிக்கு 7 வயதில் மற்றும் 8 வயது என இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருநாதனின் இரண்டாவது மனைவி, தனது கணவர் தன் இரு பெண் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து குருநாதனை கைது செய்து வழக்குபதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில் குருநாதனின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி மாலதி கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கும் நிவாரண நிதியாக தலா 2 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பரிந்துரை விடுத்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தலா 20 வருடங்கள் என மொத்தம் 40 வருடம் சிறை தண்டனையும், தலா 5000 வீதம் மொத்தம் 10000 ரூபாய் அபராதத் தொகையும் செலுத்த வேண்டும். மேலும் இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.