மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 பெண்கள் குழுவாக சேர்ந்து செய்த காரியம்.. குளுகுளூ குற்றாலத்தில் பயணிகளை வியர்க்க வைத்த கேடிஸ்..!
சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து திருட்டு செயலில் ஈடுபட்ட 4 கேடி பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டு இருந்த பெண்ணின் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் முருகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், சி.சி.டி.வி கேமிராக்களை கண்காணித்து மதுரையை சார்ந்த லதா (வயது 33), சுமித்ரா (வயது 28), ரத்னா (வயது 30), லட்சுமி (வயது 35) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் குழுவாக வந்து சுற்றுலா பயணிகளின் நகை மற்றும் பணங்களை குறிவைத்து திருட்டு செயலில் நடந்தது தெரியவந்தது.