திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை.! மீறினால் கடும் நடவடிக்கை.! தமிழக அரசு எச்சரிக்கை!!
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தொழில் செய்து, பணிபுரிந்து வரும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பட்டாசு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி பட்டாசு கொண்டு சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதனை கண்காணிக்க பேருந்து நிலைய நேர கண்காணிப்பாளர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நடத்துனர்களுக்கு பேருந்துகளில் ஏறும் பயணிகளின் உடைமைகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.