மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகாலையிலே குவிந்த ரசிகர்கள்..!! ஐ.பி.எல் டிக்கெட் முன்பதிவுக்கு போட்டா போட்டி..!!
ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்க கிரிக்கெட் ரசிகர்கள் அதிகாலை முதலே சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
16 வது ஐ.பி.எல் டி-20 போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்ப்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் முன்னாள் சாம்ப்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
ஐ.பி.எல் டி-20 போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் சி.எஸ்.கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 2 கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க கிரிக்கெட் ரசிகர்கள் அதிகாலை முதலே சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.