மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமாகி 2 மாதம், மனைவிக்கு 4 மாதம்.. விருப்பமில்லாமல் நடந்த கட்டாய திருமணத்தில் விபரீதம்.. பெண் கொடூர கொலை.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சிலம்பரசன் (வயது 30). கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி ரோஜா. இந்த தம்பதிகளுக்கு கடந்த மே மாதம் நான்காம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணமான இரண்டு மாதத்தில் ரோஜா கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்த நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், கணவர் சிலம்பரசன் கைது செய்யப்பட அவர் தனது பரபரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அதாவது பட்டப்படிப்பை முடித்து இருந்த ரோஜா கூலி வேலை பார்த்து வரும் சிலம்பரசனோடு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் கூறியும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.
மேலும், திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின் திருமணத்தை கைவிட முடிவில் பெண் வீட்டார் இருந்தாலும், ஊராரை கூட்டி மணமகன் தரப்பு பஞ்சாயத்து பேசி திருமணத்தை நடத்தி முடித்துள்ளது.
திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் ரோஜா நான்கு மாத கர்ப்பிணியான நிலையில், சிலம்பரன்ஸனுக்கு ரோஜாவின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாகவும் கூறப்படும் நிலையில், இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதமும் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று ரோஜா தனது கணவருடன் ஆத்திரம் கொண்டு சரிக்கு சமமாக பதில் பேசியதால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.