மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பர்கள் கண்முன் தலைதுண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்; சிதம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியை சார்ந்தவர் வடிவேலு. இவரின் மகன் அருண் பாண்டியன் (வயது 28). சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி மனைவி மற்றும் எட்டு மாத குழந்தை இருக்கின்றனர்.
அதே பகுதியை சார்ந்த துரை என்பவரின் மகன் செந்தில் (வயது 43) உட்பட சிலருடன், திடல் பகுதியில் சம்பவத்தன்று விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் அடையாளம் தெரியாத மர்ம நபர் அருண்பாண்டியனை கத்தியால் வெட்ட முயற்சித்துள்ளார். இதனை செந்தில் தடுக்க முயற்சிக்க, அவரது கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
அருண்பாண்டியனை சரமாரியாக தாக்கிய மர்ம நபர், அவரது கழுத்தை வெட்டி தலையை துண்டித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து அருண் பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.