மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிக்கு பாலிடெக்னீக் மாணவன் தாலிகட்டிய விவகாரம்; வீடியோவை பகிர்ந்தவர் பி.சி.ஆர் சட்டத்தில் கைது..!
நிழற்குடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலிகட்டிய மாணவனை எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர், பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வீடியோ எடுத்த நபரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 12ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு, பாலிடெக்னீக் கல்லூரியில் பயிலும் மாணவன் மஞ்சள் தாலி கட்டினார். இதனை மாணவனின் நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோவை கண்ட பலரும் தங்களின் கண்டன குரலை எழுப்ப, இளவயது மாணவர்கள் வாழ்க்கையின் விபரீதம் தெரியாமல் வாழ்க்கையை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இன்னும் சிலர் இருவரின் காதலை தெய்வீக காதலாக கருதி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வீடியோ குறித்து வழக்குப்பதிந்த சிதம்பரம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி வெங்காயத்தலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், மாணவன் வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்தனர். மாணவன் - மாணவியை காவல் நிலையம் அழைத்து சென்ற அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
பின்னர், மாணவிக்கு அறிவுரை வழங்கிய அதிகாரிகள், மாணவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சிதம்பரத்தை சேர்ந்த எழுத்தாளர் பாலாஜி கணேசன் என்பவரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாய்ச்சி கைது செய்தனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் வழக்குபதியப்பட்டுள்ளது.