அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்.!
தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த விவசாயி லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளஞ்சாவடி, வழுதளம்பட்டு கிராமத்தில், வடக்குத்தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது 55). இவர் விவசாயி ஆவார். சம்பவத்தன்று, குள்ளஞ்சாவடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
குறிஞ்சிப்பாடி புறவழிசாலையில் பயணித்துக்கொண்டு இருந்த சுந்தரமூர்த்தி, சிங்கபுரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் எதிரே வந்துள்ளார். அச்சமயம் எதிர்திசையில் வந்த லாரி, சுந்தரமூர்த்தியின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுந்தரமூர்த்தி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி காவல் துறையினர், சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி ஓட்டுனருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த சில மாதமாகவே அதிகளவு லாரிகளினால் விபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.